வெளிப்படுத்தப்பட்ட ரகசியங்கள்



சகோதரன் பிரான்ஹாமினுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் ஸ்தாபன முறைமை மதசமந்தமான ஸ்தாபனங்களை மேம்படுத்துவதற்கென்று உருவாக்கப்பட்டிருந்தது என்றும், அது உண்மையான சுவிசேஷம் அல்ல என்பதும் தெளிவானது. சகோதரன் பிரான்ஹாம் வேதாகமத்தை வார்த்தைக்கு வார்த்தை விசுவாசித்து வந்தார். அதனால் தன்னுடன் பணிபுரிவோர், நண்பர்கள் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுதாயிருந்தாலும் வார்த்தையை விசுவாசிப்பதை விட்டுக் கொடுக்காமலிருந்தார்.

மிஷெனரி பாப்டிஸ்டு சபையில் ஒரு அங்கத்தினராயிருக்கும்போதே, பெண் ஊழியக்காரிகளை நியமனஞ்செய்யும்படிக்கு அவரிடம் கூறப்பட்டது. ஆயினும் அவர் வேதவாக்கியங்கள் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருந்தார். 1 தீமோத்தேயு 2-ம் அதிகாரம் 12-ம் வசனமோ, “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறுகிறது. மேலும் 1 கொரிந்தியர் 14-ம் அதிகாரம் 34-ம் வசனமும், “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை;…”என்று கூறுகிறது. இது ஸ்திரீகளுக்கு எதிரான காரியமாய் இல்லாதிருந்தது, ஆனால் வேதத்திலோ இந்தப் பொருளின்பேரில் எழுத்து வடிவில் எழுதப்பட்டிருந்தது. எனவே இறுதி அறிவிப்பு வழங்கப்பட்டபோது, அவர் ஒப்புரவாக முடியாமல் சபையை விட்டு வெளியேறினார்.

அந்த ஒரு வேதவாக்கியம் மாத்திரமே ஸ்தாபனங்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருந்தது என்பது அல்ல. கர்த்தர் ஞானஸ்நானத்தின் பேரிலான சத்தியத்தை சகோதரன் பிரான்ஹாமுக்கு வெளிப்படுத்தினார். இயேசுவானவர், “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” என்று கட்டளையிட, அதே சமயத்தில் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு ஞானஸ்நானமும் இயேசுவின் நாமத்தில் இருந்தது எப்படி? “மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலர் 2:38-ல் அப்போஸ்தலனாகிய பேதுரு கட்டளையிட்டான். வேதவாக்கியங்கள் பூரண ஒற்றுமையில் கிரியை செய்தாலும், இந்த இரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு தீர்க்கதரிசி அவசியமாயிருந்தது. “பிதா” என்பது ஒரு நாமமல்ல, “குமாரன்” என்பது ஒரு நாமமல்ல, “பரிசுத்த ஆவி” என்பதும் ஒரு நாமமல்ல. அதாவது ஒரு மனிதன் தன்னுடைய பிள்ளைகளுக்கு தகப்பனாயிருக்கிறான், தன்னுடைய பெற்றோர்களுக்கு குமாரனாயிருக்கிறான், தன்னுடைய சகோதர சகோதரிகளுக்கு சகோதரனாயிருக்கிறான், ஆயினும் அதேசமயத்தில் அவனுடைய பெயர், “தகப்பன்”, “குமாரன்” அல்லது “சகோதரன்” என்பது அல்ல என்பதைப் போன்றேயாகும். பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கான பட்டப் பெயர்களாயிருக்கின்றன. மத்தேயு 28 :19-ம், அப்போஸ்தலர் 2:38-ம் பரிபூரண வரிசைக்குள்ளாக வருகின்றன.

ஏதேன் தோட்டத்தில் உண்டான மூல பாவமும் கூட ஒரு கனியைப் புசித்ததினால் அல்லவென்றும், தேவனுடைய வார்த்தை அவிசுவாசித்ததினாலேயே என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. எப்படி ஆதாமும், ஏவாளும் ஒரு துண்டு கனியை புசித்தவுடனே தாங்கள் நிர்வாணிகள் என்பது வெளிப்பட்டிருக்க முடியும்? அது சாதாரணமாகவே அர்த்தத்தை உண்டாக்கவில்லையே. நிர்வாணத்திற்கும் ஆப்பிள் பழத்திற்கும் சம்மந்தம் என்ன? தேவனுடைய தீர்க்கதரிசி இந்த இரகசியத்தை தெளிவாக வெளிப்படுத்தினார்.

வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் மற்றும் 3-ம் அதிகாரங்களில் கூறப்பட்டிருந்த தூதர்கள் யார்? அவர்களுடைய பெயர்கள் நன்கு தெரிந்தவைகளாயிருக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரத்தில் இரகசியமாக குதிரையின்மேல் சவாரி செய்கிறவர்கள் யார்? அவர்கள் பொதுவாகவே மிக முக்கியமான ஒரு காரியத்தை உடையவர்களாயிருக்கின்றனர்.

வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

7-ம் அதிகாரத்தில் இரட்சிக்கப்பட்டிருந்த 144000 பேர் யார்?

17-ம் அதிகாரத்தின் மாக வேசி யார்? அவளுடைய அடையாளம் மற்றும் இந்த எல்லா இரகசியங்களும் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த வல்லமையான தீர்க்கதரிசியின் செய்தியில் வெளிப்படுத்தப்பட்டன.

கணக்கற்ற அற்புதங்கள் மாத்திரமே இந்த மனிதனைப் பின்தொடரவில்லை, ஆனால் காலங்களினூடாக வேதாகமத்தில் மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களும் கூட அவருடைய ஊழியத்தில் வெளிப்படுத்தப்பட்டன. அது மல்கியா 4-ம் அதிகாரத்திற்கும் அதிகமான வேதவாக்கியங்களை இந்தத் தீர்க்கதரிசி நிறைவேற்றினார் என்பது தெளிவாகிவிட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 10:6: ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்.

ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்து, தேவனுடைய மூல வார்த்தைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று உலகில் ஒரு சத்தம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. நம்மில் ஒவ்வொருவரும் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் கொண்டிருந்த அதே தருணத்தை உடையவர்களாயிருக்கிறோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு தங்களுடைய மார்க்க சம்பந்தமான ஸ்தாபனங்களுக்கு தங்களுடைய நாளில் தலைவணங்க விரும்பாத சிலரோடு நாமும் எண்ணப்படும்படியான வாய்ப்பினை உடையவர்களாயிருக்கிறோம்.

பரிசுத்த வேதம் தேவனோடு சஞ்சரித்த மனிதர்களின் ஜீவியங்களையும் அவர்களின் கிரியைகளையும், அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அறிவித்ததையும், அவர்களுடைய வார்த்தைகள் பிழையற்ற அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும் உறுதிபடுத்தப்பட்டிருந்ததையும் பதிவு செய்துள்ளது. அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளாயும், அவர்களுடைய சந்ததிக்கு தேவ சத்தமுமாயிருந்தனர்.

இயேசுவானவர் இங்கே இருந்தபோது இருந்த சமயங்களைக் காட்டிலும் அவைகள் இப்பொழுது வித்தியாசமாயிருக்கின்றனவா? அவரை சிலுவையில் அறைந்தது மார்க்க ரீதியான தலைவர்களேயாவர். மிகப்பெரிய மதசம்மந்தமான முறைமைக்கு மத்தியில் சீஷர்களோ மிகச் சிறிய குழுவினராகவே இருந்தனர். அவர்கள் விலக்கி வைக்கப்பட்டு, பரியாசம் செய்யப்பட்டு, மிகப் பெரிய பேர்வாய்ந்த ஸ்தாபன முறைமைகளுக்கு எதிர்த்து நின்றதால் இறுதியில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு நம்முடைய நம்பிக்கைகளுக்காக நாம் கொல்லப்படாமலிருக்கலாம். ஆனால் நாம் நிச்சயமாகவே துன்புறுத்தப்படுகின்றோம். பரிசேயரும், சதுசேயரும் போன்று, அவர்களால் சகோதரன் பிரான்ஹாமின் ஊழியத்தைப் பின்தொடர்ந்த அற்புதங்களை மறுதலிக்க முடியவில்லை. ஆகையால் அவர்கள் மற்ற தாக்குதல்களை நாடுகின்றனர். அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியாயிருந்தார், வெறித்தனமான கோட்பாட்டின் தலைவர் அல்லது இன்னும் மோசமாகக் கூற நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவர் தேவனுடைய பிள்ளைகளை ஆளுகை செய்கிற பிடிவாதமான கட்டுப்பாடு கொண்ட ஸ்தாபனங்களையும், வழிபாட்டு முறைகளையும் உறுதியாக எதிர்த்து நின்ற ஒரு தாழ்மையான தேவனுடைய மனிதனாயிருந்தார். இயேசுவானவர் அவர்களுடைய கோட்பாடுகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் எதிர்த்து நின்றபோது, அவர்கள் அதேவிதமாகவே அவரைத் தாக்கினர்.

வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படியான சகோதரன் பிரான்ஹாமினுடைய விருப்பார்வத்தை தேவன் கனப்படுத்தினார். அவருடைய ஊழியத்தை இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தும்படியாக தேவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஏழாம் தூதனின் சத்தம் எப்போதும் முழக்கமிட்டுக்கொண்டு வருவதைப் போன்றே முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய இருபது இலட்சம் மக்கள் சகோதரன் பிரான்ஹாம் அவர்களுடைய செய்தியை விசுவாசிக்கின்றனர். இது கிறிஸ்தவமார்க்கத்தை சார்ந்தவர்களாக உரிமை கோரும் இருநூறு கோடி மக்களில் மிகச் சிறிய அளவுகொண்ட சிறுபான்மையினராயிருக்கலாம், ஆனால் எப்பொழுது தேவனுடைய பிள்ளைகள் சிறுபான்மையினராயில்லாமலிருந்தனர்?

வெளிப்படுத்தின விசேஷம் 10:6-ல் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டிருந்த அந்த சத்தம் நிறைவேறும்படியாக ஒலிபதிவு செய்யப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட பிரசங்கங்கள் எங்களிடத்தில் உண்டு. இந்த ஒவ்வொரு பிரசங்கமும் அதிகமான தேவரகசியங்களை வெளிப்படுத்துகிறது. நீங்கள் அதைக் கேட்க வேண்டுமென்று மனப்பூர்வமாய் விரும்பினால், அந்த சத்தம் உங்களுக்குக் கிடைக்க உள்ளது.

 

தெரிந்துகொள்ளுதல் உங்களுடையதாயுள்ளது.

ஜனங்கள் என்னைப் பின்பற்றி என் சபையில் சேரவேண்டுமென்றோ அல்லது ஒரு ஐக்கியத்தையோ, ஸ்தாபனத்தையோ துவங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இந்த செய்தியை அளிப்பதில்லை. நான் அவ்விதமாக செய்ததேயில்லை, இப்பொழுதும் அதை செய்யமாட்டேன். அந்த காரியங்களில் எனக்கு ஆர்வமில்லை, ஆனால் தேவனை குறித்தும் மற்றும் ஜனங்களைக் குறித்துமுள்ள காரியங்களிலேயே அக்கறை கொண்டுள்ளேன். என்னால் ஒரு காரியத்தை மாத்திரம் செய்து முடிக்க முடியுமானால், நான் திருப்தியடைவேன். அந்த ஒரு காரியம் என்னவென்றால், தேவனுக்கும் மனிதருக்கும் ஓர் உண்மையான ஆவிக்குரிய உறவினை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும். அதினாலே மனுஷர் கிறிஸ்துவுக்குள்ளாகப் புது சிருஷ்டிகளாகி, அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, அவருடைய வார்த்தையின்படி ஜீவிப்பதேயாகும். எல்லோரும் இக்காலத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தங்கள் ஜீவியங்களை முழுமையாய் அவரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்து, மன்றாடி, எச்சரிக்கிறேன். நான் எனக்குள்ள எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்துவிட்டேன் என்று நான் என் இருதயத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; அவருடைய வருகை உங்களுடைய இருயத்தை களிகூரச் செய்வதாக.

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

 

 

 

சங்கை வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களின் ஊழியத்தைக் குறித்து மேலும் விபரம் அறிய வேண்டுமானால், அவருடைய பிரசங்கங்களை எப்படிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,
தயவுகூர்ந்து தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி::

THEMESSAGE.COM

த.பெ.எண். 950
ஜெபர்ஸன்வில், இந்தியானா 47131 அமெரிக்கா
812-256-1177