சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்தின ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அடிக்கடி விளக்கிக் கூறியிருக்கிறார். அது அவருடைய பிறப்பின்போது, பிரசன்னமாயிருந்து, பின்பு ஒஹையோ நதிக்கரையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு காணப்பட்டு, அவர் சென்ற இடமெங்கும் பின்தொடர்ந்தது என்பது தெரியவரலாயிற்று. 1950-ம் வருடம் கர்த்தர் இந்த அக்கினி ஸ்தம்பம் தீர்க்கதரிசியோடிருந்தது என்ற பிழையற்ற நிரூபணத்தை விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் அளித்தார்.
சர்ச்சைக்குரிய வாதம் நடைபெறவிருந்த சாம் ஹவுஸ்டன் அரங்கம் அன்றிரவு மூடிவைக்கப்பட்டிருந்தது. சகோதரன் பிரான்ஹாம் நடத்திக்கொண்டிருந்த ஒரு சுகமளிக்கும் எழுப்புதல் ஆராதனையோ தேசமெங்கும் தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. கர்த்தராகிய இயேசுவின் ஆசீர்வாதங்கள் ஆவிக்குரிய பிரகாரமான கோதுமை நிலங்களின் மேல் மழை பொழிவது போல பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் திறனாய்வின்றி வெளிப்பட்டதில்லை. எப்பொழுதும் போலவே சத்துரு எதிராளியாய் எழும்பினான். இரண்டு வலிமைகளும் டெக்ஸாஸில் உள்ள ஹவுஸ்டனில் சந்திக்க, கர்த்தருடைய தூதனானவர் தாமே யுத்தத்தில் சண்டையிட இறங்கி வந்தார்.
இந்த தேவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்த கணக்கற்ற அற்புதங்களைக் குறித்து சாட்சி பகர ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் அங்கே பிரசன்னமாகியிருந்தனர். அப்பொழுது ஒரு நாள் முன்கூட்டியே உள்ளூர் ஊழியர்கள் குழுவானது தெய்வீக சுகமளித்தலின் பேரில் வாதிட வரும்படி தீர்க்கதரிக்கு சவாலிட்டது. ஆனால் சவாலோ தீர்க்கதரிசியினுடைய உண்மையான பழைய நண்பரான சங்கை F.F.பாஸ்வர்த் அவர்களுக்கு விடப்பட்டது. இந்த உள்ளூர் பாப்டிஸ்டு ஊழியரால் அநேக ஐயுறுவாதிகள் தீவிரமான ஆதரவுப்பெற்று, தெய்வீக சுகமளித்தலைக் குறித்த விமர்சனத்திற்கு குரல் கொடுத்தனர். நடைபெறவிருந்த விவாதம் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தியாக பிரசுரிக்கப்பட்டு, கசியப்பட்டு, “இன்று மாலை 7.00 மதியளவில் சாம் ஹவுஸ்டன் அரங்கத்திலே அனல் பறக்கும் இறையியல் விவாதம் நடைபெறும்” என்று துரிதமாக தலைப்புச் செய்தியாக கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டது.
அந்த ஐயுறுவாதியோ புகைப்படமெடுக்கும் தொழிலை செய்து வந்த டக்ளஸ் புகைப்பட தொழிலகத்தின் உரிமையாளரான டெட் கிப்பர்மேன் அவர்களை விவாத ஆதாரச் சான்றிதழுக்காக பணம் கொடுத்து அமர்த்திக்கொண்டார். அன்று மாலை ஐயுறுவாதி தன்னடக்கத்தோடு நின்ற பாஸ்வர்த் அவர்களை மிரட்டி அச்சுறுத்தும் மாதிரியான நிலையில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஒருமுறை ஐயுறுவாதி தன்னுடைய விரலினால் இந்த தாழ்மையான வயோதிகருடைய முகத்தில் குத்துவதுபோலவும் புகைப்படம் எடுக்கப்பட்டது.
விவாதம் துவங்கியபோது, சங்கை பாஸ்வர்த் அவர்கள் எந்தக் கேள்வியையும் விட்டு வைக்காமல், தெய்வீக சுகமளித்தலின் நிச்சயத்தை வேதப்பிரகாரமான ஆதாரத்தோடு உடனடியாக நிரூபித்துவிட்டு, தங்களுடைய பலவீனங்களிலிருந்து குணமாக்கப்பட்டிருந்த யாவரும் எழும்பி நிற்கும்படி கேட்டுக்கொண்டார். அப்பொழுது ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய காலூன்றி எழும்பி நின்றனர். சுகமடைந்ததாக எழும்பி நின்றவர்கள் தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்தப் பிறகு, இந்த நல்ல பேர் பெற்ற மனிதனுடைய ஸ்தாபனத்தில் அங்கத்தினராயிருந்துகொண்டே தெய்வீக சுகமளித்தலினால் சுகமடைந்தவர்கள் யாவரும் எழும்பி நிற்கும்படி கேட்டார். அப்பொழுது கர்த்தராகிய இயேசு அவர்களுக்கு காண்பித்திருந்த இரக்கத்தை பெருமையோடு காண்பிக்க முந்நூறு சபை அங்கத்தினர்கள் எழும்பி நின்றனர்.
அப்பொழுது, “அந்த தெய்வீக சுகமளிப்பவன் முன்னால் வரட்டும். அவன் அற்புதங்களை நிகழ்த்தட்டும்” என்ற சவால் ஐயுறுவாதியினிடத்திலிருந்து விடுக்கப்பட்டது. இயேசு மாத்திரமே தெய்வீக சுகமளிப்பவராயிருந்தார் என்பதை சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார், ஆனாலும் ஐயுறுவாதியினிடத்திலிருந்து சரமாரியான வசைச் சொற்கள் தொடர்ந்தன. முடிவிலே சகோதரன் பாஸ்வர்த் சகோதரன் பிரான்ஹாம் அவர்களை மேடைக்கு வரும்படி அழைத்தார். அப்பொழுது அவர் அந்த ஆரவார ஆதரவின் நடுவிலே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
அப்பொழுது தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, பின்வரும் பதிலை அளித்தார்:
நான் யாரையுமே குணப்படுத்த முடியாது. நான் இதைக் கூறுகிறேன். நான் ஒரு குழந்தையாய் கென்டக்கி நாட்டில் பிறந்தபோது, என்னுடைய அன்பான சொந்த தாயாரின் வார்த்தையின்படி என்னுடைய ஜீவியம் முழுவதுமே ரூபகாரப்படுத்தப்பட்டு வந்துள்ளதான ஒரு ஒளி, அந்த மண் தரைக் கொண்ட, ஜன்னலே இல்லாத கதம்பக் கூளமான அங்கிருந்த பழைய அறையில் ஒரு சிறு கதவினைப் போன்று ஒரு ஜன்னலுக்காக வைத்திருந்த ஒரு பழைய பலகையை சுமார் காலை ஐந்து மணிஅளவில், பொழுது விடிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் திறக்க, இந்த ஒளி உள்ளே வந்து வட்டமிட்டது. அந்த நேரம் முதற்கொண்டு அது என்னோடு இருந்து வருகிறது. அது தேவனுடைய தூதனாகும். சில வருடங்களுக்கு முன்னால் அவர் என்னை ஒரு தனிப்பட்ட நபரின் ரூபத்தில் சந்தித்தார். என் ஜீவியம் முழுவதும் அவர் என்னிடத்தில் கூறின காரியங்கள் சம்பவித்துள்ளன. அவர் என்னிடத்தில் கூறின விதமாகவே நான் அவைகளை கூறியிருக்கிறேன். எனவே நான் எந்த இடத்தில் உள்ள எவரும் நான் வளர்க்கப்பட்ட பட்டிணத்திற்கு அல்லது வேறெங்காகிலும் சென்று கர்த்தருடைய நாமத்தில் கூறப்பட்டிருந்த எந்தக் காரியமாவது நிறைவேறாமல் போனதுண்டா என்று கூறும்படிக்கு சவாலிடுகிறேன். ஆனால் அது சம்பவிக்கும் என்று கூறப்பட்ட விதமாகவே அது சரியாக நிகழ்ந்துள்ளது.
அவர் அத்தகைய வார்த்தைகளைக் கூறினப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் மேடையின்மேல் இறங்கினார். அப்பொழுது உணர்ச்சிவசப்பட்ட புகைப்படமெடுப்பவர் ஒரு புகைப்படத்தை எடுத்தார். சகோதரன் பிரான்ஹாம் எளிமையாக மேடையை விட்டுச் சென்றார். அதே சமயத்தில் இந்த தீர்க்கதரிசன வாக்குமூலத்தையும் கூறினார்: “தேவன் சாட்சி பகருவார். நான் இனி ஒன்றும் கூறமாட்டேன்.”
திரு. கிர்பர்மேன் என்பவருடைய கூட்டாளி அடுத்த நாள் காலை பத்திரிக்கைச் செய்திக்காக துரிதமாக அந்த நிழற்படங்களை புகைப்படங்களாக்கும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் முதல் நிழற்படத்தை புகைப்படமாக்கினபோது அவர் விநோதமான ஏதோ ஒரு காரியத்தை கவனித்தார். அதற்குப் பின்னர் எடுத்த ஐந்து புகைப்படங்களிலும் ஒன்றுமே விழாமல் வெறுமையாயிருந்தன. ஆனால் அவர் அதிலிருந்து கடைசி பதிப்பை இழுத்தபோது, அவர் தன் இருதயத்தைப் பிடித்துக்கொண்டு மாரடைப்பால் விழுந்தார். அந்த கடைசி புகைப்படத்தில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்களுடைய தலைக்கு மேலே காணக்கூடிய ரூபத்தில் அக்கினி ஸ்தம்பம் நின்றிருந்தது.
அக்கினி ஸ்தம்பம் மோசேயை வழிநடத்தினதை இஸ்ரவேல் புத்திரர் சாட்சி பகர்ந்தனர். அதே அக்கினி ஸ்தம்பம் மற்றொரு தீர்க்கதரிசியை வழிநடத்தினது என்று இந்த தற்கால ஜனங்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.
அந்தப் புகைப்படம் அமெரிக்க காவல்துறையில் F.B.I. என்ற துப்பறியும் இலக்காவில் உள்ள தொழில்துறைச் சார்ந்த சந்தேகம் வாய்ந்த தஸ்தாவேஜுக்களின் பரிசோதகரான ஜார்ஜ் J. லேஸி என்பவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தன்னுடைய மிகச் சிறந்த திறனாய்வு கருத்தோடு இந்த புகைப்படத்தை முற்றிலும் உண்மையென அங்கீகாரமளித்தார். இதற்கு அடுத்த பக்கத்தில் திரு.லேஸி அவர்களின் அதிகாரப்பூர்வமான தஸ்தாவேஜு வெளியிடப்பட்டுள்ளது.
இது கணினி அல்லது தொழில்நுட்ப புகைப்படக் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னமே எடுக்கப்பட்டது. சகோதரன் வில்லியம் பிரான்ஹாமின் தலைக்குமேல் காணப்படுகிற அந்த உண்மையான ஒளியை விஞ்ஞானத்தாலும் விளக்கிக் கூறிட இயலாது. இன்றைக்கு இந்த புகைப்படம் அத்தேசத்தின் தலைநகரான வாஷிங்டன் DC-யில் உள்ள ஐக்கியநாடுகள் காங்கிரஸ் நூலகத்தில் காணப்படுகிறது.