இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் உலகத்தின் அழிவைக் குறித்து வாக்களிக்கிறது. ஆனால் முடிவிற்கு முன்பாக எலியா தீர்க்கதரிசி திரும்பிவந்து, மேசியாவை அறிமுகப்படுத்துவார் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. யோவான்ஸ்நானன் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிவிட்டான் என்று சிலர் கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் மேசியா வரப்போவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். எலியாவின் ஆவியைக் கொண்ட ஒரு மனிதன் மேசியாவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பார் என்று மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்துள்ளதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் யோவான் ஸ்நானன் வந்தபோது, அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியான எலியாவாக அவன் இருக்கவில்லை. எனவே எலியா ஏன் முதலில் வரவில்லை என்பதைக் குறித்து அவர்கள் இயேசுவிடம் கேள்விகேட்டபோது, “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்” என்ற அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் யோவான் இருந்தான் என்பதை அவர்களுக்கு அவர் தெளிவாகக் கூறினார். (எலியா என்ற எபிரெய பெயரிலிருந்து தோன்றிய கிரேக்கப் பெயரே எலியாஸ் என்று ஆங்கிலத்தில் உள்ளது.)
ஒரு சிறு கூட்ட ஜனங்கள் மாத்திரமே இந்த வெளிப்பாட்டினை ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான பக்தியுள்ள தலைவர்களுக்கோ யோவான் தங்களுடைய ஸ்தாபனங்களைக் குறித்து அதிகப் பொறாமையினால் குறைகூறும் ஒருவனாய் கருதப்பட்டான், அவர்கள் எலியாவின் ஆவியை மட்டும் அடையாளங்கண்டுகொள்ளாமலிருக்கவில்லை, அதைக் காட்டிலும் மோசமென்னவென்றால், அவர்கள் கிறிஸ்துவின் வருகையையுங்கூட தவறவிட்டுவிட்டனர்.
ஆகையால் யோவான் ஸ்நானன் மல்கியாவினுடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினானா? முழுமையாக நிறைவேற்றவில்லை.
முதலாவது உலகமானது இன்னும் “சூளையைப் போல எரிந்து போய்விடவில்லை”, ஆகையால் மல்கியா 4-ம் அதிகாரத்தின் கடைசிப்பாகம் இன்னும் நிறைவேறவேண்டியதாயுள்ளது என்பதை நாம் அறிவோம். மேலும் வேதவாக்கியத்தின் மற்றொரு பாகமான, “பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” என்பது யோவானால் நிறைவேற்றப்படவில்லை. இயேசுவானவர்தாமே, “எலியா முந்திவந்து (எதிர்காலம்) எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்” (மத்தேயு 17:11) என்று தீர்க்கதரிசனமுரைத்துள்ளார்.
ஆகையால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக நாம் எலியாவிற்காக எதிர்நோக்கியிருக்க வேண்டும்.
இப்பொழுது இந்த நவநாகரீக நாளில், இது கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகைக்கான வேளையாய் உள்ளது. மல்கியா 4-ம் அதிகாரத்தின்படி எலியாவின் ஆவியானது மீண்டும் அவரை நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் எலியா வரும்பொழுது, எந்த ஜனக் குழுவினர் அடையாளங்கண்டுகொள்வர்? அவருக்காக எதிர்நோக்கியிருக்கிறவர்கள் மாத்திரமே.
இந்த முடிவான வேளைக்கான மல்கியாவினுடைய தீர்க்கதரிசனத்தைக் குறித்து நாம் சிந்திக்கையில், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவருடைய இந்த வார்த்தைகளே சிந்தைக்கு வருகின்றன;
ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள்... மத்தேயு 17:12
இந்த எலியாவின் வருகையை நாம் தவறவிட்டால் என்னவாகும்? வேதபாரகரும், பரிசேயரும் யோவான் ஸ்நானனை அடையாளங்கண்டுகொள்ளாதக் காரணத்தால் கிறிஸ்துவின் முதல் வருகையை தவறவிட்டதுபோல நாம் அவருடைய இரண்டாம் வருகையை தவறவிட்டுவிடுவோமா?
சான்றாதாரங்கள்
2 இராஜாக்கள் 2:15
எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர் கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
ஏசாயா 40:3-4
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும். [யோவான் ஸ்நானன்]
மல்கியா 3:1
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், [யோவான் ஸ்நானன்], அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 4:1-6
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள் [அது இன்னும் சம்பவிக்கவில்லை]; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும் [யோவான் ஸ்நானன்], பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். [தற்கால எலியா]
மத்தேயு 11:10
அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். [மல்கியா 3:1, யோவான் ஸ்நானன்]
மத்தேயு 11:14
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். [யோவான் ஸ்நானன்]
மத்தேயு 17:11-12
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். [தற்கால எலியா]
ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். [யோவான் ஸ்நானன்]
லூக்கா 1:17
பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். [யோவான் ஸ்நானன்]