ஜெப விண்ணப்பம்

ஆம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அற்புதங்களை நிகழ்த்தின அதே இயேசு கிறிஸ்து இன்றைக்கும் அதே அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார் என்று நாங்கள் உறுதியாக விசுவாசிக்கிறோம். எங்களைப் போலவே நீங்களும் ஜெபத்தில் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், தயவு கூர்ந்து கீழ்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். கர்த்தர் பதிலளிக்கும்போது, நீங்கள் உங்களுடைய சாட்சியை எங்களுக்கு அனுப்ப வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


மாற்கு 16:17-18

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

 

யோவான் 14:12-14

மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.

 

1 பேதுரு 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்: அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

ஜெப விண்ணப்ப படிவம்


*தேவைப்படுகிற துறைப் பிரிவு