தூதனிடத்திலிருந்து ஒரு வருகை



தரிசனங்கள் தொடர்ந்து தோன்றின. ஆனால் அவருடைய தரிசனங்கள் தேவனிடத்திலிருந்து தோன்றியவையல்லவென்று அவருடைய கூட்டாளிகளாகிய போதகர்களால் அவருக்கு கூறப்பட்டது. ஒரு அசுத்த ஆவி அவரை பிடித்துள்ளது என்றே அவருக்கு கூறப்பட்டது. அது அவரை ஆழ்ந்த தொல்லைக்குள்ளாக்கினது. எனவே அது தாங்கிக்கொள்ள முடியாத மிகுந்த பாரமாயிருந்தபடியால், அவர் தேவனுடைய சித்தத்தைக் கண்டறிய வனாந்திரத்திற்குச் சென்றார். மேலும் அவர் தான் பதிலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்பி வருவதில்லை என்று சபதமிட்டு மிகுந்த உறுதிகொண்டிருந்தார். அப்பொழுது அங்கே பழைய கண்ணி வைக்கும் அறையில் கர்த்தருடைய தூதன் அவருக்கு அவருடைய ஊழியத்திற்கான கட்டளையை அளித்தார். இன்னும் மற்ற காரியங்களுக்கிடையே அந்த தூதன் இதைக் கூறினார்: “நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், நீ ஜெபிக்கும்போது உத்தமமாக இருந்தால், உன்னுடைய ஜெபங்களுக்கு முன்னால் ஒன்றுமே நிற்காது, புற்றுநோயும் கூட நிற்காது” என்பதேயாகும்.

எல்லா சந்தேகங்களும் போய்விட்டன. இப்பொழுது அவர் கட்டளைப் பெற்று, தைரியமாக முன்னோக்கி அடியெடுத்து வைத்தார். சுகமளிக்கும் எழுப்புதல்கள் துவங்கின.

இலட்சக்கணக்கானோர் பிரான்ஹாம் அவர்களுடைய கூட்டங்களில் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கானோர் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமாக்கப்பட்டனர். ஓரல் ராபர்ட்ஸ், T.L. ஆஸ்பர்ன் மற்றும் A.A. ஆலன் போன்ற மற்ற சுவிசேஷகர்களும் சீக்கிரத்தில் சகோதரன் பிரான்ஹாமை பின்தொடர ஆரம்பித்து, தங்களுடைய சொந்த சுகமளிக்கும் எழுப்புதல் கூட்டங்களை நடத்தத் துவங்கினர். அப்பொழுது கர்த்தர் இதற்கு முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்கு தம்முடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளினார். இயேசு கிறிஸ்துவின் சுகமளிக்கும் கரம் மீண்டும் ஒருமுறை அவருடைய ஜனங்களைத் தொட்டது.

“அண்மையில் தேவனால் நம்முடைய சகோதரன் வில்லியம் பிரான்ஹாம் மூலம் சபைக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் குறித்து, ஆச்சரியமான அவருடைய சுகமளிக்கும் வரத்தைக் குறித்து நான் அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளேன். இந்த ஒரு தேவனுடைய காரியமானது நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிற வல்லமையாயிருக்கிறது (எபே. 3:20) ஏனென்றால் நான் இதுவரை வில்லியம் பிரான்ஹாம் அவர்களின் சுகமளிக்கும் ஊழியத்திற்கு இணையாக எந்தக் காரியத்தையும் ஒருபோதும் கண்டதோ அல்லது படித்ததோக் கிடையவே கிடையாது.”

சங்கை. F.F. பாஸ்வர்த், உலகப் பிரசித்திப்பெற்ற சுவிசேஷகர், தற்கால பெந்தேகோஸ்தே இயக்க அசெம்பலீஸ் ஆஃப் காட் ஸ்தாபன ஸ்தாபக பிதாக்களில் ஒருவர்.

“உதாரணமாக, அவர் கட்டிலின்மேல் படுக்கையாய்க் கிடந்த ஒரு மனிதனிடத்தில் பேசினதை நாங்கள் கவனித்தோம். முதலில் அந்த மனிதனிடத்திலிருந்து அறிவுப் பூர்வமான எந்த பதிலுக்கான அடையாளமும் காணப்படவில்லை. பின்னர் அந்த மனிதனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவருடைய மனைவியினிடத்திலிருந்து விளக்கம் கிடைத்தது, அதாவது அந்த மனிதன் புற்று நோயினால் மட்டும் மரித்துக்கொண்டிருக்கவில்லையென்றும், கூறப்படுகிறதை கேட்க முடியாத செவிடனாய் இருந்தான் என்பதும் தெரியவந்தது.

அப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் அவனுடைய புற்று நோயிலிருந்து சுகம் பெறுவதைக் குறித்து அவனுக்கு கட்டளையிடுவதை அவன் கேட்கும்படியான கேட்கும் திறனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினர். பின்னர் ஒரு நிமிடம் ஜெபம் செய்தார். அப்பொழுது திடீரென்று அந்த மனிதனால் கேட்க முடிந்தது. மாலை முழுவதும் முகபாவனையற்று, உணர்ச்சியற்று காணப்பட்டிருந்த அந்த மனிதனுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடினது. அப்பொழுது அவனுடைய புற்று நோயிலிருந்து அவன் விடுவிக்கப்படுவதைக் குறித்து அவனிடத்தில் கூறப்பட்டதை அவன் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டான்.”

சங்கை. கார்டன் லிண்ஸ்டே, திறம்பட எழுதவும், செயலாற்றவுங் கூடிய பண்பு நலன்கள் நிரம்பப் பெற்ற ஆக்கியோன், ஊழியர் மற்றும் ஸ்தாபன தேசங்களுக்கான கிறிஸ்துவின் ஸ்தாபகர்.

“சகோதரன் பிரான்ஹாம், காங்கிரஸ்காரர் குணமடைந்து விட்டார் என்று கூறினபோது, என் இருதயம் துள்ளி குதித்தது. நான் காலூன்றி எழும்பி, கர்த்தரை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டேன்.” என் கக்கத்தண்டுகளை நான் ஒருபுறம் வைத்துவிட்டேன்... பரலோகத்தின் அடித்தளமே தாழ இறங்கிற்றே!”

வில்லியம்.D. உப்ஷா, அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ்காரர் (1919 - 1927), 1932-ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டவர். குழந்தைப் பருவத்தில் விழுந்து தன்னுடைய முதுகெலும்பு முறிவினால் முடமானவர். 66 வருடங்களாக முடமாக இருந்து, தன்னுடைய 84-ம் வயதில் சகோதரன் பிரான்ஹாம் அவர்களின் ஜெபத்தினால் பரிபூரண குணமடைந்தவர். அதற்குப் பின் அவருடைய வாழ்நாளில் அவருக்கு ஒரு சக்கர நாற்காலியோ அல்லது கக்கத்தண்டுகளோ ஒருபோதும் தேவைப்படவேயில்லை.

“நான் எட்டு வருடங்கள் மற்றும் ஒன்பது மாத காலமாக எலும்புருக்கி நோயினால் படுக்கையாய்க் கிடந்தேன். மருத்துவர்களும் என்னை கைவிட்டிருந்தனர். நான் 50 பவுண்டுகள் எடை மட்டுமே கொண்டவளாய் காணப்பட்டேன். என் முழு நம்பிக்கையும் அற்றுப்போனது போன்றே தென்பட்டது. அப்பொழுது வனாந்திரத்தில் ஒரு ஆட்டுக் குட்டி சிக்கிக்கொண்டு, அழுதுகொண்டிருந்ததாக சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம் ஒரு தரிசனங்கண்டு இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லிலிருந்து நான் வசிக்கிற ‘மில்டவுன்’ என்ற இடத்திற்கு வந்தார். சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் இதற்கு முன்பு இங்கு ஒருபோதும் வந்ததேக் கிடையாது மற்றும் இங்குள்ள எவரையுமே அவர் அறிந்திருக்கவில்லை. அப்பொழுது அவர் உள்ளே வந்து, தன்னுடைய கரங்களை என்மேல் வைத்து, ஜெபித்து, நம்முடைய அன்பான கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எனக்காக முறையிட்டார். அப்பொழுது என்னைப் பற்றியிருந்த ஏதோ ஒன்று எடுக்கப்பட்டது போன்று தென்பட்டது. உடனே நான் எழும்பி, அவருடைய வல்லமை என்னை குணமாக்கினதற்காக தேவனை ஸ்தோத்தரித்தேன். நான் இப்பொழுது இங்குள்ள பாப்டிஸ்டு சபையில் இசைப் பேழையை இசைப்பவளாக இருக்கிறேன்.”

ஜார்ஜி கார்டர், மில்டவுன் இந்தியானா, எலும்புருக்கி நோயின் மரண விளிம்பில் குணமாக்கப்பட்டவள். 1940-ம் ஆண்டுக்குப் பின்னர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள்கூட அந்த வியாதியினால் மீண்டும் ஒருபோதும் அவதியுற்றதேயில்லை. அவருடைய ஊழியத்தின் மூலமாக குணமடைந்திருக்கிற, இன்னமும் இன்றைக்கும் குணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இலட்சக்கணக்கான மக்களுக்கும் அவள் எடுத்துக் காட்டாயிருக்கிறாள்.