ஆரம்பம்



“நான் சிறு கென்டக்கி மலையின்மேல் உள்ள சிறு குடிலில் பிறந்தபோது, கர்த்தருடைய தூதன் ஜன்னல் வழியாக வந்து அங்கே நின்றார். அது ஒரு அக்கினி ஸ்தம்பமாய் இருந்தது.”

குளிர்ச்சியான ஏப்ரல் மாதத்தின் அடர்ந்த இருளில் பொழுது விடிய துவங்கிக்கொண்டிருந்தது. அந்த ஒரே சிறு அறையில் இருந்த ஒரு மர ஜன்னல் விடியலின் வெளிச்சத்தை உள்ளே உதயமாகச் செய்தது. அந்த ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ராபின் பறவை விசேஷமாக அக்காலையில் உணர்ச்சிவசப்பட்டது போன்று இருதயத்தின் ஆழத்திலிருந்து தன்னுடைய உச்ச குரலில் பாடிக்கொண்டிருந்தது. அறையின் உட்புறத்திலோ சார்லஸ் பிரான்ஹாம் என்ற வாலிபன் தான் அணிந்திருந்த புத்தம் புதிய மேலாடையின்மேல் கைகளைக் கட்டிக்கொண்டவாறு, பதினைந்து வயது நிரம்பிய தன்னுடைய மனைவியைப் பார்த்தார். அந்த தந்தையார், “நாம் இவரை வில்லியம் என்று பெயரிட்டு அழைப்போம்” என்றார்.

ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஒளி ஜன்னலுக்குள் வந்தது. அந்த ஒளி அறை முழுவதும் அசைவாடி, குழந்தை பிறந்திருந்த அந்த படுக்கையின் மீது வட்டமிட்டது. இதே ஒளிதான் எபிரெய பிள்ளைகளை எகிப்திலிருந்து வெளியேக் கொண்டு வந்தது. பவுல் தமஸ்குவிற்கு செல்லும் அவனுடைய பாதையில் சந்தித்ததும் இதே ஒளியாகத் தான் இருந்தது. இது உலகத்திலிருந்து கிறிஸ்துவின் மணவாட்டியை அழைக்கும்படி இந்தக் குழந்தையை வழிநடத்தச் செல்வதாயிருந்தது. அந்த ஒளி கர்த்தருடைய தூதனாகிய அக்கினி ஸ்தம்பமேயன்றி வேறொன்றுமில்லை. அது மீண்டும் ஒருமுறை மனிதனண்டை பிரசன்னமாகியிருக்கிறது.

இந்த சிறு மரக் குடிலில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காலையில் தந்தையும் தாயும் நான் எப்படிக் காணப்படுகிறேன் என்பதைக் காணும்படியாக வெளிச்சம் உள்ளே பிரகாசிக்கும்படிக்கு மருத்துவச்சி ஜன்னலைத் திறந்தார். அப்பொழுது ஏறக்குறைய ஒரு தலையணை அளவுகொண்ட ஒரு ஒளி ஜன்னலினூடாக சுழன்றுகொண்டு உள்ளே வந்தது. அது நான் இருந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டு, பின்னர் படுக்கைக்கு மேலே நின்றது. மலையில் இருந்த அநேக ஜனங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர்.

இந்த எளிமையான வீடு தெற்கத்திய கென்டக்கி மலைகளில் இருந்தது, அது சிறிய பர்க்ஸ்வில் பட்டினத்திற்கு அருகில் இருந்தது. பிறந்த தேதியோ ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, 1909-ம் வருடமாயிருந்தது. பத்து பிள்ளைகளுக்கு இந்தக் குழந்தையே மூத்ததாயிருந்தது.

கர்த்தருடைய தூதனானவர் இந்த சிறு பிள்ளையான வில்லியம் பிரான்ஹாமை சிறிது காலம் கழித்து மீண்டும் சந்தித்தார்.

அவர் ஒரு சிறுபிள்ளையாயிருந்தபோது, முதன்முறையாக தூதன் அவரிடத்தில் பேசினபோது, அவர் அருகில் அமைந்துள்ள நியூ ஆல்பனி என்று அழைக்கப்படுகிற ஒரு பட்டிணத்தில் இவர் வசிப்பார் என்று கூறினார். அப்பொழுது அவர் வீட்டிற்குச் சென்று தன்னுடைய தாயாரிடம் சம்பவித்திருந்ததைக் கூறினார். மற்ற தாயாரைப் போன்றே இவருடைய தாயாரும் அந்த சம்பவத்தைக் குறித்து அதிகம் சிந்திக்காமல், அவருடைய இளம்பிராய நரம்புத் தளர்ச்சியைப் போக்க வேண்டுமென படுக்கையில் படுக்க வைத்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அவருடைய குடும்பத்தினர் இந்தியானா, ஜெபர்ஸன்வில்லிற்கு சில மைல்கள் தூரத்தில் உள்ள தெற்கத்திய இந்தியானா பட்டணமாகிய நியூ ஆல்பனிக்கு குடிபெயர்ந்து சென்றனர்.

மீண்டும் சில வருடங்கள் கழித்து இந்த வாலிப தீர்க்கதரிசியினிடத்தில் தூதன் பேசினார். அது வண்ணமயமான இலையுதிர் காலத்தில் கதகதப்பாக சூரியன் பிரகாசிக்கும் செப்டம்பர் மாதத்தின் ஒரு அமைதியான நாளாயிருந்தது. அப்பொழுது அந்த பிள்ளையாண்டான் நொண்டிக்கொண்டே அந்த வயிலில் இரண்டு வாளி தண்ணீரை சுமந்து வந்தான். அவனுடைய காயப்பட்ட நுனிவிரலில் அழுக்குப் படிவதைத் தடுக்க தானியக் கதிர் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அவர் ஒரு உயரமான நெட்டிலிங்க மரத்தின் நிழலில் இளைப்பாறும்படி அமர்ந்தார். அவர் தன்னுடைய இன்னலைக் குறித்து அழுதபோது, அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவருடைய நண்பர்களோ உள்ளூர் குளத்தில் மீன்பிடிப்பதில் தங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்க, இவரோ தன்னுடைய தந்தைக்காக தண்ணீர் சுமந்து சென்றுகொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மேல் இருந்த மரத்தில் ஒரு காற்று சுழல ஆரம்பித்தது. அப்பொழுது அவர் தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டு, தன்னுடைய காலூன்றி எழும்பி நின்றார். அப்பொழுது அவர் இலைகள் காற்றினால் அசையும் ஓசையைக் கேட்டார்…ஆனால் காற்றோ அங்கில்லாதிருந்தது. அவர் மேல்நோக்கிப் பார்க்க, நெட்டிலிங்க மரத்திற்கு கிட்டத்தட்ட பாதிதூரத்தில் ஏதோ ஒன்று காய்ந்துபோன இலைகளை சுழற்றிக் கொண்டிருந்தது.

சடுதியாக ஒரு சத்தம், “மது அருந்தாதே, புகைக்காதே, உன்னுடைய சரீரத்தை எந்த வழியிலும் கறைபடுத்திக்கொள்ளாதே, நீ பெரியவனாகும்போது, நீ செய்ய வேண்டிய ஒரு ஊழியம் உண்டு” என்று உரைத்தது. ஏழு வயது கொண்ட பையனாயிருந்த அவர் பயமடைந்து தன்னுடைய வாளிகளைப் போட்டுவிட்டு தன்னுடைய தாயிடம் விரைந்தோடினார்.

சாமுவேல் தீர்க்கதரிசியிடம் பேசினது போன்றே, தேவன் மீண்டும் ஒரு சிறு பிள்ளையிடம் பேசியிருந்தார்.

சில வாரங்கள் கழித்து அவர் தன்னுடைய இளைய சகோதரனோடு கோலி குண்டுகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு விநோதமான உணர்வு அவர் மீது உண்டானது. அந்த சமயத்தில் அவர் ஓஹையோ நதியை நோக்கிப்பார்த்து, அதன்மேல் அழகான பாலத்தைக் கண்டார். பதினாறு மனிதர் அந்த ஆற்றைக் கடக்கும் பாலத்தினால் விழுந்து மரிப்பதையும் அவர் கண்டார். இதுவே அந்த வாலிப தீர்க்கதரிசி கண்டிருந்த முதல் தரிசனமாயிருந்தது. அப்பொழுது அவர் அதை தன்னுடைய தாயிடம் கூற, அந்தத் தாயோ அவருடைய சம்பவத்தை எழுதி வைத்தார். பல வருடங்கள் கழித்து கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் அமைந்துள்ள இரண்டாம் தெருவில் உள்ள அந்த ஒஹையே நதியின் மேல் பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது அதேவிதமாக பதினாறு பேர் விழுந்து மரித்துப்போயினர்.

கர்த்தர் எதிர்கால தரிசனங்களை அவருக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளுக்கு நிகழ்ந்தது போன்ற தரிசனங்கள் ஒருபோதும் தவறிப்போகவேயில்லை.