ஆதியாகமம் 3:1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஆதியாகமம் 3:6-7
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
ஆதியாகமம் 3:14-15
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
இதுவே வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் பாவமாகும். சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமான சர்ப்பமானது சாப்பிடக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட ஒரு துண்டு பழத்தை சாப்பிடுவதில் ஏவாளை “வஞ்சித்தான்.” எனவே அவள் அதைப் புசித்து, பின்னர் அதை தன்னுடைய கணவனுக்கும் கொடுத்தாள். அதுவே அவர்கள் நிர்வானிகளாயிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள காரணமாயிருந்தது.
வெளிப்படையான கேள்விகள்: ஒரு சர்ப்பத்தினால் பேச முடியுமா? நிர்வாணமாயிருப்பதற்கும் ஆப்பிள் பழத்திற்கும் சம்மந்தம் என்ன? இவை எல்லாவற்றிற்குள்ளும் சர்ப்பத்தின் வித்து எங்கே பொருந்துகிறது?
சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது மிகவும் “தந்திரமாயிருந்தது” என்று வேதம் கூறுகிறது. அது ஒரு மனிதனைப் போன்றே நடக்கக்கூடியதாயும், பேசக்கூடியதாயும், அறிவாற்றல் கொண்ட உரையாடலை நிகழ்த்தக்கூடியதாயுமிருந்தது. ஆதாமினுடைய மனைவியை அவன் வஞ்சித்தப்பிறகு, தேவன் அவனை வயிற்றினால் நகர்ந்துசெல்லும் ஒரு சர்ப்பமாயிருக்கும்படி சபித்துவிட்டாரேயன்றி, தீங்கு செய்யப்பட்டு, வித்தானது விதைக்கப்படுவதற்கு முன்னர் அவன் அவ்வாறில்லை.
சர்ப்பம் ஒரு வித்தை உடையதாயிருந்ததென்றும், இருவித்துக்களுக்கிடையே தேவன் பகையை உண்டாக்கினார் என்றும் ஆதியாகமம் 3:15-ல் வேதம் கூறுகிறது. வெளிப்படையாகவே பிரிவினைக்கு முன்னமே சர்ப்பத்தின் வித்தானது ஏவாளுடைய மாம்சபிரகாரமான வித்தோடு கலந்துவிட்டது. எப்படி அவையாவுமே ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டதன் விளைவாக இருக்கக்கூடும்? அப்படியானால் பின்னால் வரும் சில வசனங்களைப் பார்ப்போம். “ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்,” ஆனால் ஆதாம் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தகப்பன் என்று அது கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.
வேதத்தில் வித்தியாசமான “கனிகள்” இருக்கின்றன. நிச்சயமாகவே ஆப்பிளைப் போன்ற உண்மையான கனி உண்டு, அது வளர்ந்து உணவாகப் புசிக்கப்படுகிறது. நம்முடைய கிரியைகளும் கனி என்றே குறிப்பிடப்படுகிறது, அதாவது இயற்கையான பணிகளான விவசாயம் மற்றும் வியாபாரம் அல்லது ஆவிக்குரிய கிரியைகளான அற்புதங்களை நிகழ்த்துதல் மற்றும் சுவிசேஷத்தை பிரசங்கித்தல் போன்ற இப்படிப்பட்டவைகளும் கனிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. அப்படியானால் கர்ப்பத்தின் கனியும் உண்டு, அது கருத்தரித்தல் மற்றும் பிள்ளைப்பேற்றைக் குறிக்கிறது.
ஆதாமும் ஏவாளும் ஒரு உண்மையான கனியைப் புசித்துவிட்டதால் தாங்கள் நிர்வாணமாயிருந்ததை உணர்ந்தனரா? அல்லது ஒரு மனிதனுக்கும் ஒரு ஸ்தீரீக்குமிடையே உண்டான சரீரப்பிரகாரமான உறவுமுறையினால் தங்களுடைய சரீரங்களின் குறிப்பிட்ட அந்த பாகங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உண்டானதா?
முழு மானிடவர்க்கமும் விழுந்துபோகக் காரணமாக அந்த நாளில் ஏதேனில் உண்மையாகவே நடந்தது என்ன?
தேவன் தம்மை மானீட சரீரத்தில் மீண்டும் சிருஷ்டித்துக்கொள்ள ஸ்திரீயின் வித்து சரியானதாய் இருந்ததுபோல, சாத்தானும் மானிட வர்க்கத்திற்குள்ளாக தனக்கு திறந்த வாசலைக் கண்டறிய சர்ப்பத்தின் வித்தும் சரியான வழியாய் இருக்கிறது. சாத்தானால் (அவன் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஆவிக்குரிய வர்க்கமாக மாத்திரமே இருக்கிறபடியால்) தேவன் தம்மை மறுபடியும் சிருஷ்டித்துக்கொள்வதுபோன்று தன்னை மறுபடியும் சிருஷ்டித்துக் கொள்வதுதென்பது கூடாதகாரியமாயிருந்தது. ஆகையால் அவன் எப்படி தன்னுடைய வித்தை உற்பத்தி செய்து, மானிட வர்க்கத்திற்கு அறிமுகப்படுத்தினான் அல்லது தம்மை அதற்குள் நுழைத்துக்கொண்டான் என்ற விபரத்தை ஆதியாகமம் சொல்லுகிறது. சாத்தானும் கூட “சர்ப்பம்” என்றழைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறான். நாம் பேசிக்கொண்டிருப்பதோ அவனுடைய வித்தைக் குறித்து அல்லது மானிட வர்க்கதிற்குள் நுழைந்ததைக் குறித்ததேயாகும்.
ஆதாம் ஏவாளை மாம்சபிரகாரமாக அறிவதற்கு முன்பே, சர்ப்பமானது அவனுக்கு முன்னே அவளை அறிந்திருந்தது. அதனால் பிறந்த ஒருவனே காயீனாய் இருந்தான். காயீன் “பொல்லாங்கனால்” (பிறந்தான், பிறப்பிக்கப்பட்டான்)
I யோவான். 3:12
…அதாவது ஏவாள் தன்னுடைய கருவறையில் இரண்டு குமாரர்களை (இரட்டையர்களை) தனித்தனியாக கர்ப்பந்தரித்தாள் என்பதே இந்தக் காரியத்தின் உண்மையாயுள்ளது. அவள் ஆபேலைக் கருத்தரிப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னதாகவே காயீனை கருத்தரித்ததினால் இரட்டையர்களை சுமந்து கொண்டிருந்தாள்.
சான்றாதாரங்கள்
ஆதியாகமம் 3:6-7
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வானிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்னினார்கள்.
[எப்படி அவர்கள் ஒரு துண்டு பழத்தை புசித்ததினால் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்திருப்பார்கள்?]
ஆதியாகமம் 3:13-15
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
[சர்ப்பம் ஒரு வித்தை உடையதாயிருந்தது. வெளிப்படையாகவே இது ஒரு வயிற்றினால் நகர்ந்து செல்லும் பாம்பைக் குறிப்பிட்டுக் கூறவில்லை.]
ஆதியாகமம் 3:20
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
[ஆதாம் ஏன் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தகப்பன் என்று அழைக்கப்படவில்லை?]
ஆதியாகமம் 4:1-2
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
[முறைப்படி கருத்தரிக்கப்பட்டாலும் அல்லது முறைதவறி கருத்தரிக்கப்பட்டாலும் எல்லா ஜீவன்களுமே தேவனிடத்திலிருந்தே உண்டாகின்றன. சாத்தானால் ஜீவனை சிருஷ்டிக்க முடியாது.]
லூக்கா 3:38
ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
[ஆதாமின் வம்ச வரலாற்றில் முதல் பிறந்த காயீன் எங்கே இருக்கிறான்?]
I யோவான் 3:12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
[தேவன் தம்முடைய சொந்த சாயலில் ஆதாமை சிருஷ்டித்தார். காயீனின் பொல்லாங்கு எங்கிருந்து உண்டானது, ஆபேலின் நீதி எங்கிருந்து உண்டானது? அவர்களுடைய தன்மைகளை அவர்களுடைய தகப்பன்மார்களிடத்திலிருந்து உடைமையாகப் பெற்றிருந்தனர்.]
யூதா 1:14, 15
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ,... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
[வேதத்தில் உள்ள ஆதாமின் வம்சவரலாற்றில் காயீன் எங்குமே இல்லை]