வெளிப்படையாகவே, ஞானஸ்நானம் மிகவும் முக்கியமானதாயுள்ளது, ஆனால் நாம் எப்படி ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறோம் என்பதே முக்கியத்துவமுடையதாயிருக்கிறது. சரியான ஞானஸ்நானம் ஒன்று உண்டா அல்லது ஏதாவது ஒன்று கிரியை செய்யுமா? நீங்கள் வேதாகமத்தை விசுவாசிப்பீர்களேயானால், அப்பொழுது ஆம், சரியான ஞானஸ்நானம் ஒன்று உண்டு.
பெரும்பாலான சபைகள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றன. ஆனால் இது வேதத்தின்படியான சரியான ஞானஸ்நானம் அல்ல.
அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் உறுதியாக இயேசுகிறிஸ்துவின்மேல் ஏற்கெனவே விசுவாசமாயிருந்த ஜனங்கள் இருந்தனர். ஆனால் அதே சமயத்தில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளாமலிருந்தனர். பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்கான சரியான வழியை அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தான். ஆகையால் அவன் அவர்களிடத்தில், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள். (அப்போ.19:3). அவர்கள் அப்போஸ்தலர் 2:38-ல் உள்ள பேதுருவின் கட்டளைப்படி ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கவில்லை என்பதை பவுல் கண்டான். எனவே அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டுமென்று கட்டளையிட்டான். அதன்பின்னர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தபடியே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர்.
ஆகையால் இயேசுவானவர்தாமே சீஷர்களிடத்தில் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் (“நாமங்களில் அல்ல”) ஞானஸ்நானங்கொடுக்கும்படிக் கூறியிருந்தபோது, அவர்கள் ஏன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானங் கொடுத்தனர்? (மத்தேயு 28:19) அவர்கள் ஒரு தவறு செய்துவிட்டார்களா? இல்லையே! அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தபடியே அவர்கள் சரியாகச் செய்திருந்தனர்.
நீங்கள் இந்தக் கைப்பிரதியில் வரும் கட்டுரையை வாசிக்கையில், உங்களுடைய பெயரைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் ஒரு குமாரனாய் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய பெயர், “குமாரனா?” நீங்கள் ஒரு தாயாக இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய பெயர் “தாயாரா?”. நிச்சயமாக அப்படியில்லை, அவைகள் வெறுமென பட்டங்கள். உங்களுக்கு ஒரு உண்மையான பெயர் உண்டு. அவ்வண்ணமாகவேத்தான் தேவனும் செய்கிறார்.
பதிலோ இங்கே உள்ளது:
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் எப்போதாவது எவரேனும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே வேதத்தில் கிடையாது; ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. பிதா என்பது நாமமல்ல; குமாரன் என்பது நாமமல்ல; பரிசுத்த ஆவி என்பது நாமமல்ல; ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதாயுள்ளது.
இயேசுகிறிஸ்துவே தேவன். அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார்.
நீங்கள் பரிசுத்த ஆவியைத் தேடிக்கொண்டிருந்தால், கர்த்தர் இன்னும் அதை உங்களுக்கு ஏன் கொடுக்காமலிருக்கிறார் என்று வியப்புற்றால், அப்பொழுது பவுல், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்” என்று கேட்ட அதேக் கேள்வியையே நீங்களும் உங்களை கேட்டுக்கொள்ளலாம்.
சான்றாதாரங்கள்
மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
[பிதாவினுடைய பெயர் என்ன? குமாரனுடைய பெயர் என்ன? பரிசுத்த ஆவியினுடைய பெயர் என்ன?]
மாற்கு 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
யோவான் 5:43
நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
[அவர் தம்முடைய பிதாவினுடைய நாமத்தில் வந்திருந்தால், அப்பொழுது அவருடைய நாமம் என்ன?]
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 12:45
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
யோவான் 14:8-9
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே,பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 20:27-28
பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
அப்போஸ்தலர் 2:38-39
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 19:3-6
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
எபேசியர் 4:5
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
கொலேசெயர் 3:17
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்.
1 யோவான் 5:7
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;