கத்தோலிக்கர்கள் தங்களுடைய சபைக் கோட்பாடுகளின்படியே தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று விசுவாசிக்கிறார்கள். தேவன் கத்தோலிக்க சபையைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்கப்போவதாக இருந்தால், அப்பொழுது பாப்டிஸ்டுகளைக் குறித்து என்ன? அவர்கள் இழக்கப்பட்டிருக்கிறார்களா? இந்துக்களையும், முகமதியர்களையும் குறித்து என்ன? நீங்கள் உங்களுடைய நித்திய இரட்சிப்பிற்கு யாரை நம்புவீர்கள்? உங்கள் சபையையா?

 


சங்கீதம் 96:13

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

இன்றைக்கு உலகத்தில் ஆயிரக்கணக்கான வித்தியாசமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதமும் மற்றொன்றை குற்றஞ்சாட்டுகிறது, அதே சமயத்தில் அவைகள் அனைத்துமே தங்களுடைய ஸ்தாபனத்தினூடாகவே இரட்சிப்பு உண்டு என்று வாக்களிக்கிறார்கள். எந்த ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வோம்?

நாம் கத்தோலிக்க சபையைத் தெரிந்துகொள்வோமேயானால், அப்பொழுது நாம் பரிசுத்தவான்களின் பரிந்துபேசுதலை ஏற்றுக்கொள்கிறோம். அது விக்கரகங்களிடம் மன்றாடுவதேயன்றி வேறொன்றுமில்லை. வேதமோ, “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” என்று கூறுகிறது. (1தீமோ. 2:5) கத்தோலிக்க மதகுரு “பிதா” என்று அழைக்கப்படுகிறார், அது மத்தேயு 23:9-ல், ‘“பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்;’ என்று இயேசுவானாவரால் கூறப்பட்டு தடுக்கப்பட்டிருந்ததே. ‘பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.’” பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்” என்று (1 கொரி.13:1)-ல் கூறியிருக்கும்போது, அசெம்பலீஸ் ஆஃப் காட் என்ற ஸ்தாபனத்தினர் அந்நிய பாஷையில் பேசுவதே பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான முதல் அடையாளம் என்று கூறுகிறார்கள்.

ஏறக்குறைய எல்லா ஸ்தாபனங்களுமே வேதாகமத்தில் அநேகக் காரியங்கள் தவறாக வியாக்கியானிக்கப்பட்டிருக்கின்றன என்றும், மொழிபெயர்ப்பில் விடப்பட்டுள்ளது அல்லது இன்றைய உலகத்தில் நடைமுறைக்கு பயன்படாது என்றும் உடனடியாக நமக்கு கூறிவிடுகின்றனர். ஆகையால் நாம் வேதாகமத்தை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோமா அல்லது ஸ்தாபன கோட்பாடுகளையா? தேவன் நியாயத்தீர்ப்பிற்கான ஒரு ஆதாரச் சட்டமாக எதைப் பயன்படுத்துவார்?

இன்றிரவு இங்கே நான் கத்தோலிக்கரிடம், “தேவன் எதைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டால், அதற்கு கத்தோலிக்கரோ, “கத்தோலிக்க சபையைக் கொண்டே” என்று கூறுவார். சரி, இப்பொழுது எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்? இப்பொழுதோ அவர்கள் ரோமர்களையும், வைதீக கிரேக்கரையும், இன்னும் அவர்கள் அநேகரையும் உடையவர்களாயிருக்கிறார்களே. அப்பொழுது அது எந்த கத்தோலிக்க சபையாய் இருக்கும்? லூத்தரன்களோ, “எங்களைக் கொண்டே” என்று கூறுகிறார்கள், அப்படியானால் பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் புறம்பாக்கப்படுகிறீர்கள். அப்படியானால் நாம், “பாப்டிஸ்டுகளைக் கொண்டே” என்று கூறுவோமேயனால், அப்பொழுது பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் புறம்பாக்கப்படுகிறீர்கள். ஆகையால் அது எப்பேர்பட்ட ஒரு குழப்பமாய் இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதை எவருமே அறிந்து கொள்ளமாட்டார்கள்; ஆகையால் அவர் உலகத்தை சபையைக் கொண்டு நீயாயந்தீர்ப்பதாக ஒருபோதும் வாக்களிக்கவேயில்லை.

அவர் உலகத்தை கிறிஸ்துவைக் கொண்டே நியாயந்தீர்ப்பதாக வாக்களித்தார், கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். உலகத்தை நியாயந்தீர்ப்பது வேதாகமமாயுள்ளது, அது நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிற இயேசு கிறிஸ்துவாகும்.

சான்றாதாரங்கள்

யோவான் 1:1

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 1:14

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவான் 5:22

பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 12:48

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந் தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

எபேசியர் 1:5-7

பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

எபேசியர் 2:5-8

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.